டிக்-டாக் செயலி தடைக்கு எதிரான வழக்கு வரும் 15ம் தேதி விசாரணை -உச்சநீதிமன்றம்


டிக்-டாக் செயலி தடைக்கு எதிரான  வழக்கு வரும் 15ம் தேதி விசாரணை -உச்சநீதிமன்றம்
x
தினத்தந்தி 9 April 2019 6:37 AM GMT (Updated: 9 April 2019 6:37 AM GMT)

டிக்-டாக் செயலி தடைக்கு எதிரான வழக்கு வரும் 15-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

‘டிக்டாக்’ செயலியில் கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் வீடியோக்கள் வருவதால் அதனை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று பொதுநல மனு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கடந்த 3-ந் தேதி ‘டிக்டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. அவசர வழக்காக விசாரிக்க மறுத்து, இந்த வழக்கு உரிய நேரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த சூழலில், டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து  தொடரப்பட்ட வழக்கு வரும் 15-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Next Story