ஜம்மு காஷ்மீரில் மருத்துவமனையில் புகுந்து பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு


ஜம்மு காஷ்மீரில் மருத்துவமனையில் புகுந்து பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு
x
தினத்தந்தி 9 April 2019 7:23 PM IST (Updated: 9 April 2019 7:23 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீரில் மருத்துவமனையில் பயங்கரவாதிகள் திடீரென புகுந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் மற்றும் அவரது தனி பாதுகாவலர் உயிரிழந்தனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வாரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் உதவி மருத்துவராக பணியாற்றி வந்தவர் சந்திரகந்த் சர்மா. ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான இவர் தனி பாதுகாவலருடன் மருத்துவமனையில் இருந்துள்ளார். அப்போது திடீரென மருத்துவமனைக்குள் புகுந்த பயங்கரவாதிகள் சிலர், தனி பாதுகாவலரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து சந்திரகந்த் சர்மாவை கொல்ல முயன்றனர். 

இந்த சண்டையில் தனி பாதுகாவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சந்திரகந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் உள்ள மற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story