பா.ஜனதா வேட்பாளரான கணவரை எதிர்த்து மனைவி சுயேச்சையாக போட்டி


பா.ஜனதா வேட்பாளரான கணவரை எதிர்த்து மனைவி சுயேச்சையாக போட்டி
x
தினத்தந்தி 10 April 2019 4:30 AM IST (Updated: 10 April 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா சார்பில் ராம்சங்கர் கதேரியா கடந்த முறை ஆக்ரா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

இட்டாவா,

இட்டாவா தொகுதியில் வரும் தேர்தலில் ராம்சங்கர் கதேரியா போட்டியிடுகிறார். இவர் தாழ்த்தப்பட்டோர் தேசிய கமிஷன் தலைவராகவும் உள்ளார்.

இந்நிலையில் அவருடைய மனைவி மிருதுளா கட்டாரியா சுயேச்சையாக கணவரை எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இது குறித்து அவர் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக இட்டாவா தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் இந்த முறையும் எனக்கு ‘சீட்’ வழங்கப்படவில்லை. என் கணவர் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. பா.ஜனதா கட்சிக்கு பாடம் புகட்ட சுயேச்சையாக களம் இறங்கி உள்ளேன் என்றார்.

இட்டாவா தொகுதியின் தற்போதைய எம்.பி. அசோக் டேக்ரே, தனக்கு மீண்டும் அதே தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story