பி.எம். நரேந்திர மோடி படத்துக்கு யூ சான்றிதழ் வழங்கியது மத்திய திரைப்பட தணிக்கை வாரியம்


பி.எம். நரேந்திர மோடி படத்துக்கு யூ சான்றிதழ் வழங்கியது மத்திய திரைப்பட தணிக்கை வாரியம்
x
தினத்தந்தி 10 April 2019 11:39 AM IST (Updated: 10 April 2019 11:39 AM IST)
t-max-icont-min-icon

பி.எம். நரேந்திர மோடி படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் யூ சான்றிதழ் வழங்கியது

புதுடெல்லி,

பி.எம். நரேந்திரமோடி என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில்  நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக படத்தை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டது. 

23 மொழிகளில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது.  எனவே படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் மனு அளித்தன.

ஓய்வு பெற்ற 47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பினர். அதில் “தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த படத்தை வெளியிட அனுமதிப்பது தேர்தல் விதிமீறல் ஆகும்” என்று கூறினர்.

இதற்கிடையில், பி.எம். நரேந்திர மோடி படம் நாளை 11-ம் தேதி (வியாழக்கிழமை) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக, படத்துக்கு தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு,  படம் வெளியாவது விதிமீறலா என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியது.

இந்த சூழலில், பி.எம். நரேந்திர மோடி படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (சிபிஎப்சி) யூ சான்றிதழ் வழங்கியுள்ளது.



Next Story