தேசிய செய்திகள்

ரபேல் குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுகிறார்- நிர்மலா சீதாராமன் + "||" + About Raphael The Supreme Court's opinions Rahulkanthi is distorted Nirmala Seetharaman

ரபேல் குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுகிறார்- நிர்மலா சீதாராமன்

ரபேல் குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுகிறார்- நிர்மலா சீதாராமன்
ரபேல் குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுகிறார்; ராகுல்காந்தியின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.
புதுடெல்லி

ரபேல் ஆவணங்களை விசாரணைக்கு ஏற்போம் என உச்சநீதிமன்றம் அறிவித்த நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

ரபேல் குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுகிறார்; ராகுல்காந்தியின் கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ரபேல் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட சில ஆவணங்கள் மட்டும் திருடப்பட்டிருக்கின்றன

ரபேல் குறித்து வெளியான ஒரு சில ஆவணங்களும் சட்டவிரோதமான முறையில் வெளியாகின. ரபேல் வழக்கில் ஆவணங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாமா, வேண்டாமா என்பது தான் கேள்வி. ராகுல்காந்தி ஆதாரமின்றி குற்றம் சாட்டி வருகிறார், ராகுல் கூறியது நீதிமன்ற அவமதிப்புக்குரியது என கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...