குர்ஜார் இடஒதுக்கீடு போராட்ட தலைவர் பா.ஜனதாவில் சேர்ந்தார்


குர்ஜார் இடஒதுக்கீடு போராட்ட தலைவர் பா.ஜனதாவில் சேர்ந்தார்
x
தினத்தந்தி 11 April 2019 4:30 AM IST (Updated: 11 April 2019 3:25 AM IST)
t-max-icont-min-icon

குர்ஜார் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திய அமைப்பின் தலைவர் கிரோரி சிங் பைன்ஸ்லா, அவருடைய மகன் விஜய் பைன்ஸ்லா ஆகியோர் நேற்று பா.ஜனதாவில் சேர்ந்தனர்.

புதுடெல்லி, 

 டெல்லி பா.ஜனதா தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ராஜஸ்தானுக்கான பா.ஜனதா பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் அவர்கள் இணைந்தனர்.

பின்னர் பேசிய பைன்ஸ்லா, ‘‘அரிதினும் அரிதான குணங்களை பிரதமர் மோடியிடம் பார்த்தேன். அதில் கவரப்பட்டு பா.ஜனதாவில் சேர்ந்துள்ளேன். காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய இரு கட்சிகளின் கொள்கைகளையும் ஆய்வு செய்த பிறகு இம்முடிவை எடுத்துள்ளேன்’’ என்று கூறினார்.


Next Story