இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும்: சந்திரபாபு நாயுடு கடிதம்


இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும்: சந்திரபாபு நாயுடு கடிதம்
x
தினத்தந்தி 11 April 2019 6:06 AM GMT (Updated: 11 April 2019 6:06 AM GMT)

வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.

அமரவாதி, 

ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவை தொகுதி மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவினை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

எனினும், ஆந்திராவில் நூற்றுக்கணக்கான இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், இயந்திரம் சரி செய்யப்பட்டு தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியதாக தெரிகிறது. 

இந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் மறு தேர்தல் நடத்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். மேலும், வாக்குப்பதிவு இயந்திரம் சீர்செய்யப்பட்டு தேர்தல் நடந்தாலும் கூட, வாக்காளர்கள் மீண்டும் வந்து வாக்கினை பதிவு செய்ய மாட்டார்கள். எனவே, 9.30 மணி வரை வாக்குப்பதிவு துவங்காத அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story