இம்ரான்கான் விருப்பம் நடைபெற அனுமதித்து விடாதீர்கள்: ஓவைசி
இம்ரான்கான் விருப்பம் நடைபெற அனுமதித்து விடாதீர்கள் என்று வாக்களித்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அசாதுதின் ஓவைசி தெரிவித்தார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மக்களவை தொகுதியில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி போட்டியிடுகிறார். பாஜக வேட்பாளர் ஜே பகவந்த் ராவை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார்.
ஐதரபாத் தொகுதியில் இன்று தனது வாக்கினை பதிவு செய்த ஓவைசி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- “பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் விருப்பம் உண்மையாவதற்கு அனுமதித்து விடாதீர்கள்” என்று கூறினார்.
மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால், இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடர வாய்ப்பு இருப்பதாக இம்ரான் கான் கூறியதை மேற்கோள் காட்டி மோடியை ஓவைசி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
Related Tags :
Next Story