மராட்டியம்: வாக்குச்சாவடி அருகே நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல்


மராட்டியம்: வாக்குச்சாவடி அருகே  நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல்
x
தினத்தந்தி 11 April 2019 8:34 AM GMT (Updated: 11 April 2019 8:34 AM GMT)

மராட்டிய மாநிலத்தில் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இருந்து 150 மீட்டர் தொலைவில் வெடிகுண்டு தாக்குதலை நக்சல்கள் நடத்தினர்.

மும்பை, 

மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மராட்டிய மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த கட்சிரோலி உள்பட 7 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

கட்சிரோலி அருகே உள்ள வகேசரி என்ற இடத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடியில் இருந்து 150 மீட்டர் தொலைவில் இன்று காலை 10.30 மணியளவில் வெடிகுண்டு தாக்குதலை  நக்சல்கள்  நடத்தினர். வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருந்த மக்கள் வெடிகுண்டு சத்தத்தால் பீதி அடைந்தனர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

முன்னதாக, நேற்று எடபல்லி  என்ற இடத்தில், தேர்தல் அதிகாரிகள் சென்ற வாகனத்தை குறிவைத்து நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு சி.ஆர்.பி.எப் வீரர் காயம் அடைந்தார்.

Next Story