ஆந்திராவில் தேர்தல் வாக்குச்சாவடியில் கலவரம் : இருகட்சியினர் மோதல் -இருவர் பலி
ஆந்திராவில் தேர்தல் கலவரம் நடந்தது, இரு கட்சியினரின் மோதலில் இருவர் உயிரிழந்தனர்.
ஆந்திரா
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஜான்லவரம் கிராமத்தில் கலவரம் காரணமாக வாக்குச்சாவடி மையத்திற்கு காவல்துறையினர் சீல் வைத்தனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பூத் முகவர் எல்லா ரெட்டியின் எலுமிச்சை தோட்டத்தை ஆளும் கட்சியினர் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த எல்லாரெட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்ததால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், வாக்காளர்களை விரட்டியடித்துவிட்டு, வாக்குச்சாவடி மையத்திற்கு சீல் வைத்தனர்.
இந்நிலையில் ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டம் புத்தளப்பட்டு பகுதியில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர் கட்சியினரிடையே நடந்த மோதலில் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story