இந்தியா முழுவதும் தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை - பிரதமர் மோடி


இந்தியா முழுவதும் தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 11 April 2019 8:01 PM IST (Updated: 11 April 2019 8:01 PM IST)
t-max-icont-min-icon

முதல் கட்டத் தேர்தலில் மோடி அரசு மீண்டும் அமையும் என்பதை உணர்த்தும் அலை வீசுவதை உணர முடிகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அசாம் மாநிலம் சில்சாரில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,  நாடாளுமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தற்போது நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் மக்களின் ஆதரவை என்னால் உணர முடிகிறது.  மோடி அரசு மீண்டும் அமையும் என்பதை முதல்கட்ட தேர்தல் உணர்த்துகிறது. இந்த அலை தொடரும். எதிர்க்கட்சிகளுக்கு எந்தஒரு வாய்ப்பும் இனி கிடையாது. அசாமில் இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள 5 தொகுதிகளிலும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இனி எதிர்க்கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றார். 

நாடு முழுவதும் 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளுக்கு நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. தேர்தல் முடிவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக பிரதமர் மோடி இவ்வாறு பேசியுள்ளார். 

Next Story