நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் முதல் நபராக ஓட்டு போட்டார்


நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் முதல் நபராக ஓட்டு போட்டார்
x
தினத்தந்தி 12 April 2019 2:56 AM IST (Updated: 12 April 2019 2:56 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற முதல்கட்ட தேர்தல் நடைபெற்ற 91 தொகுதிகளில் மராட்டிய மாநிலத்தில் உள்ள 7 தொகுதிகளும் அடங்கும்.

நாக்பூர், 

நாக்பூர் தொகுதியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், முதல் நபராக ஓட்டு போட்டார். ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்பே, காலை 6.50 மணிக்கு அவர் ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷியுடன் வந்தார்.

காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கும்வரை காத்திருந்து, பின்னர் வாக்களித்தார்.

நிருபர்களிடம் பேசுகையில், மக்கள் பெருமளவில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என்று மோகன் பகவத் கேட்டுக்கொண்டார். நாக்பூர் தொகுதியில், மத்திய மந்திரி நிதின் கட்காரி போட்டியிடுகிறார்.


Next Story