நிஜாமாபாத் தொகுதி தேர்தல் கின்னஸ் சாதனையில் இடம் பெறுகிறது : ஒரு வாக்குச்சாவடியில் 12 மின்னணு எந்திரங்கள்
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் நாடாளுமன்ற தொகுதியில் முதல்–மந்திரி சந்திரசேகர் ராவின் மகள் கவிதா மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.
ஐதராபாத்,
177 விவசாயிகள் உள்பட மொத்தம் 185 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதன் காரணமாக ஒரு வாக்குச்சாவடிக்கு 12 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வீதம் 1,778 வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட்டது. ஒரு எந்திரத்தில் அதிகபட்சம் 16 பெயர்கள் மட்டுமே இடம்பெற்றது.
அதிக வேட்பாளர் போட்டியிட்டது மட்டுமின்றி, அதிக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
இதுபற்றி தேர்தல் அதிகாரிகள் கின்னஸ் உலக சாதனை அமைப்பின் உள்ளூர் பிரதிநிதிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஓரிரு நாளில் இந்த எந்திரங்களை பார்வையிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் செலவும் சராசரியைவிட ரூ.15 கோடி அதிகமாவதாக ஒரு அதிகாரி தெரிவித்தார். இந்த தொகுதியில் 54.20 சதவீதம் வாக்குகள் பதிவானது.
Related Tags :
Next Story