மே 15–ந் தேதிக்குள் ‘பசுமை பட்டாசு தயாரிப்பு பற்றி அறிக்கை தாக்கல் செய்யுங்கள்’ : மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


மே 15–ந் தேதிக்குள் ‘பசுமை பட்டாசு தயாரிப்பு பற்றி அறிக்கை தாக்கல் செய்யுங்கள்’ : மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 April 2019 11:24 PM GMT (Updated: 11 April 2019 11:24 PM GMT)

பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

புதுடெல்லி, 

வேதிப்பொருட்கள் இல்லாத பசுமை பட்டாசை தயாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவில் திருத்தம் கோரி தமிழக அரசும், சில பட்டாசு தயாரிப்பாளர்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘தொழிலாளர்களின் வேலை இழப்பை நாங்கள் எந்த வகையிலும் ஏற்க மாட்டோம். பேரியம் கொண்டு தயாரிப்பதை அனுமதிக்க முடியாது, இதற்கு மாற்று முன்வைத்துத்தான் ஆகவேண்டும் என்று கூறியதோடு, மத்திய அரசு ஏன் இத்தனை தாமதம் செய்கிறது? என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘ஜூலை மாதத்துக்குள் பசுமை பட்டாசு தயாரிப்பு பற்றிய கொள்கை முடிவை தாக்கல் செய்கிறோம்’’ என்று தெரிவித்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பு (பெசோ) 30–ந் தேதிக்குள் பசுமை பட்டாசு குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசு மே 15–ந் தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறி, ஆகஸ்டு மாதத்துக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.


Next Story