இந்தியாவில் அதிக முறை தேர்தலில் தோற்ற சாதனை வேட்பாளர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டி


இந்தியாவில் அதிக முறை தேர்தலில் தோற்ற சாதனை வேட்பாளர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டி
x
தினத்தந்தி 12 April 2019 3:02 PM IST (Updated: 12 April 2019 3:02 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் அதிக முறை தேர்தலில் தோற்ற சாதனை வேட்பாளர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடுகிறார்

கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட தேர்தல் மன்னன் பத்மராஜன்  பிறந்து வளர்ந்தது எல்லாம் சேலத்தில் உள்ள ஆத்தூரில் தான். இப்போது  மேட்டூர் பக்கத்தில் உள்ள குஞ்சான்டியூரில் பஞ்சர் கடை ஒன்றை  நடத்தி வாழ்ந்து வருகிறார்.

கடந்த 1988-ல்  தேர்தல் களத்தில் இறங்கிய அவர் முதன் முறையாக மேட்டூர் சட்டமன்றத் தேர்தல்  எனத் தொடங்கி, எம்.பி., குடியரசுத் தலைவர் தேர்தல் என மன்மோகன்சிங், அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி, நரேந்திரமோடி, விஜயகாந்த், கருணாநிதி, ஜெயலலிதா, எடியூரப்பா ஆகியோரை எதிர்த்து சுயேச்சையாக  போட்டியிட்டு தோல்வி அடைந்தே சாதனை படைத்து  வருகிறார்.

கடந்த 30 ஆண்டுக்காலமாக தொடர்ந்து இதுவரை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என 200 முறை போட்டியிட்டிருக்கிறார். குறிப்பாக, தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டுமே போட்டியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் பத்மராஜன், தற்போது கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து  வயநாடு தேர்தல் நடத்தும் அதிகாரியான அஜயகுமாரிடம் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

இது அவரது அரசியல் பயணத்தில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் 201-வது வேட்பு மனு ஆகும். அதிக முறை மோதிரம் சின்னத்தில் போட்டியிட்ட அவர் வயநாட்டிலும் மோதிர சின்னத்திலேயே போட்டியிடுகிறார். 

தேர்தலுக்கான டெபாசிட் பணமாக மட்டும் இதுவரையில் 30 லட்சம் செலவழித்துள்ள அவர் அதிகம் தோற்ற வேட்பாளர் என்ற பெருமையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். லிம்கா சாதனை புத்ததகத்தில் அதிகமுறை தோற்றவர் என்று இடம் பெற்று உள்ளார்.


Next Story