நம் விழியில் எரியும் கோபம், நம் விரல்களில் வெடிக்கட்டும்! கமல்ஹாசன் பிரசார வீடியோ வெளியீடு
நம் விழியில் எரியும் கோபம், நம் விரல்களில் வெடிக்கட்டும்! என கமல் ஹாசன் பிரசார வீடியோவை வெளியிட்டுள்ளார்.
2019 நாடாளுமன்றத் தேர்தல், 18 தொகுதிகள் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் போட்டியிடுகிறது. கமல்ஹாசன் பிரசார வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி மற்றும் எச்.ராஜா பேசும் காட்சிகளை கொண்ட டிவியின் மீது கமல்ஹாசன் ரிமோர்ட்டை கோபமாக எறிந்துவிட்டு பேசும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
கமல் ஹாசன் பேசுகையில், முடிவு பண்ணிட்டீங்களா? யாருக்கு ஓட்டு போடப் போறீங்க? குடும்ப அரசியல் என்ற பெயரில் நாட்டையே குழிதோண்டி புதைச்சாங்களே அவங்களுக்கா? இல்ல நம்ப உரிமைக்காக போராடும்போது நம்பள அடிச்சி துரத்தினார்களே அவங்களுக்கா? நலத்திட்டம் என்ற பெயரில் நிலத்தையே நாசம் செய்து விவசாயிகளை அம்மனமாக்கி நாட்டை தலைகுணிய வைத்தார்களே அவங்களுக்கா? இல்ல கார்ப்பரேட் கைக்கூலியாக மாறி பணத்திற்காக நம்ப மக்களையே சுட்டுக் கொலை செய்தார்களே அவர்களுக்கா? யாருக்கு ஓட்டு போடப் போறீங்க?
நீ என்னடா சொல்றது. எங்களுக்கு தெரியும். எங்க அப்பா, அம்மா யாருக்கு ஓட்டு போட சொல்றாங்களோ அவங்களுக்குதான் ஓட்டு போடுவோம் அப்படின்னு நீங்க சொல்றது கேட்கிறது. சரிதான், அம்மா அப்பா சொல்றபடி கேட்கணும். ஆனால் எந்த அம்மா அப்பா சொல்றத கேட்கணும்னு நான் சொல்றேன்.மொத்த அரசாங்கமும் சேர்ந்து நீட் தேர்வு என்ற பெயரில் ஒரு பொண்ண கொலை செய்தார்களே அந்தப் பெண்னோட அப்பா அம்மாகிட்ட கேளுங்க. அவங்க சொல்வாங்க யாருக்கு போகக்கூடாது என்று.
நாட்டை ஆள தகுதியே இல்லாத இந்த நாட்டில் அதை தட்டி கேட்கிற ஒருத்தனா உங்களில் ஒருத்தனா கேட்கிறேன். யாருக்கு ஓட்டு போடப் போறீங்க. வரும் ஏப்ரல் 18 குனிந்து கும்பிடாதீர்கள். நிமிர்ந்து ஓட்டு போடுங்க. ஏப்ரல் 18-ம் தேதி நீங்கள் வெற்றி களம் காணும் நாள். நாங்களும்தான், வணக்கம் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story