சாதி, மத அடிப்படையில் மக்களை பிரிக்கிறது, பா.ஜனதா அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

சாதி, மத அடிப்படையில் மக்களை பிரிக்கிறது, பா.ஜனதா அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 April 2019 11:24 PM IST (Updated: 12 April 2019 11:24 PM IST)
t-max-icont-min-icon

சாதி, மத அடிப்படையில் மக்களை பிரிக்கிறது, பா.ஜனதா அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

லக்னோ, 

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பா.ஜனதா, மக்களுக்கு போலி கனவுகளை உண்டாக்கி, ‘நல்ல நாள்’ வரும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், நிஜத்தில் எதுவும் நடக்கவில்லை.

பா.ஜனதா, சாதி, மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறது. ஆனால், மகா கூட்டணியோ வெறுப்புணர்வை அகற்றி, அரசியல் சட்டத்தை காக்க விரும்புகிறது. சமூக நீதி மூலம்தான் மாற்றம் வரும். மத்தியில் ஆட்சிக்கு வந்தால், காவலாளிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story