தேசிய செய்திகள்

100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு + "||" + Humbled to pay my homage to Jallianwala Bagh martyrs, says Vice President

100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 100-வது ஆண்டு நினைவு நாளையொட்டி அதன் நினைவாக ரூ.100 நாணயத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
அமிர்தசரஸ்,

கடந்த 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி ரவுலட் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில்  ஏராளமானோர் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது அவர்களை கலைந்து செல்லுமாறு பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக் கொண்டது. எனினும் அவர்கள் கலையவில்லை. 

இதையடுத்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதன் நினைவு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தினம் 100-ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு  ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 100-வது ஆண்டு  நினைவாக ரூ.100 நாணயத்தை வெளியிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. நிலையான அரசு அமைய தெளிவான தீர்ப்பு வழங்கிய மக்களுக்கு வாழ்த்துக்கள் : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிக்கை
நிலையான அரசு அமைவதற்காக தெளிவான தீர்ப்பை வழங்கிய மக்களை வாழ்த்துவதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
2. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் 1999-க்கு பிறகு பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
3. ‘பயங்கரவாதம் மனித குலத்துக்கு அச்சுறுத்தல்’ சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
பயங்கரவாதம் மனிதகுலத்துக்கே அச்சுறுத்தலாக உள்ளது என்று சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் வெங்கையா நாயுடு பேசினார்.