மேற்கு வங்காளத்தில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பு
மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டத்துக்கு உட்பட்ட சிலிகுரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை), காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சிலிகுரி,
மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டத்துக்கு உட்பட்ட சிலிகுரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை), காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக வருகை தரும் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் சிலிகுரி அருகே உள்ள டகபூரில் தரையிறங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் டகபூரில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் திடீரென அனுமதி மறுத்துள்ளது. அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் முகாம் அமைப்பதற்காக ஒதுக்கி இருப்பதால், அங்கு ஹெலிகாப்டர் தரையிறங்குவது சாத்தியமில்லை எனக்கூறி டார்ஜிலிங் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. எனவே ராகுல் காந்தியின் இந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் காங்கிரசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக டார்ஜிலிங் தொகுதி வேட்பாளர் சங்கர் மலகார் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுக்கு தோல்வி ஏற்படும் என்ற பயத்தில்தான் முதல்–மந்திரி மம்தா பானர்ஜி அரசு இத்தகைய தடையை ஏற்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.
Related Tags :
Next Story