தேசிய செய்திகள்

மோடி அரசு பெரு நிறுவனங்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடி வங்கிக் கடன் தள்ளுபடி - காங்கிரஸ் குற்றச்சாட்டு + "||" + Government wrote off Rs 5.5 lakh cr loans of its blue eyed boys Congress

மோடி அரசு பெரு நிறுவனங்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடி வங்கிக் கடன் தள்ளுபடி - காங்கிரஸ் குற்றச்சாட்டு

மோடி அரசு பெரு நிறுவனங்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடி வங்கிக் கடன் தள்ளுபடி - காங்கிரஸ் குற்றச்சாட்டு
மோடி அரசு பெரு நிறுவனங்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடி வங்கிக் கடன் தள்ளுபடி செய்துள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்தியில் உள்ள மோடி அரசு கடந்த 5 ஆண்டுகளில் நெருக்கமான, நட்பான தொழிலதிபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் ரூ.5.5 லட்சம் கோடி வங்கிக்கடனை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கடன் தள்ளுபடி ரூ. 7 லட்சம் கோடியாகும். இதில் மோடி அரசு செய்த தள்ளுபடி ரூ.5.5 லட்சம் கோடியாகும். மோடி அரசில்தான் 80 சதவீதம் வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

இது ஒட்டுண்ணி முதலாளித்துவத்தின் மிகமோசமான உதாரணம். சராசரியாக பார்த்தால் ஒரு ஆண்டுக்கு தொழில் அதிபர்களுக்காக மோடி அரசு ரூ. ஒரு லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது. தொழில் அதிபர்களுக்காக கடன் தள்ளுபடி செய்யப்பட்டால் மறுமுதலீடு உருவாக்கத்துக்கு வரி செலுத்துவோரின் பணத்தை எடுத்தும் என்ன பயன்?  என கேள்வியை எழுப்பியுள்ளார். மோடி அரசு ஒருபுறம் பெருநிறுவன முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி வழங்குகிறது. மறுபுறம் மறுமுதலீட்டுக்கு வழி செய்கிறது. இது வேடிக்கையானது, மோசடியானது. மிகவும் மோசமான ஒரு கபட நாடகமாகும். இரட்டை வேடத்துடன் செயல்படும் இந்த அரசை தண்டிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை எனக்  கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. வாரணாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி
வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார்
2. வாரணாசி தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். #PMModi #Varanasi
3. வாரணாசியில் ஆதரவாளர்களுடன் ஆறு கி.மீ. தூரம் வரை பேரணியாக சென்ற பிரதமர் மோடி
பிரதமர் மோடி 2-வது முறையாக போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று மெகா பேரணி நடந்தது.
4. விடுப்பு எடுத்து பிரசாரம் செய்யுங்கள் : தொண்டர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை
விடுப்பு எடுத்து பிரசாரம் செய்யுங்கள் என ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
5. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. #PMmodi #LokSabhaElections2019