மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய பெட்டி தொடர்பாக விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்


மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய பெட்டி தொடர்பாக விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 April 2019 5:20 PM IST (Updated: 14 April 2019 5:20 PM IST)
t-max-icont-min-icon

மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய பெட்டி தொடர்பாக விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

பிரதமர் மோடி கடந்த வாரம் கர்நாடகாவில் பிரசாரம் செய்ய வந்தபோது ஹெலிகாப்டரில் இருந்து கருப்பு நிறப்பெட்டி ஒன்று இறக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளியானது. ஹெலிகாப்டரில் இருந்து இறக்கப்படும் பெட்டி காரில் ஏற்றப்படுகிறது. பெட்டி ஏற்றப்பட்ட கார் பிரதமர் மோடியின் பாதுகாப்பு அணிவகுப்பில் இடம்பெறாத கார் என கூறப்படுகிறது. இப்போது பெட்டியில் இருந்தது என்ன? கார் யாருடையது? என்ற கேள்வியை காங்கிரஸ் எழுப்பியுள்ளது.

மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய பெட்டி தொடர்பாக விசாரிக்க தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் கொடுத்துள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறுகையில், பெட்டியில் இருந்தது என்ன என்பது தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். என்ன பொருட்கள் இருந்தது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும். பிரதமர் மோடிக்காக மூன்று பாதுகாப்பு ஹெலிகாப்டர்கள் வந்துள்ளது. அதிலிருந்து இறக்கப்பட்ட பெட்டி வைக்கப்பட்ட கார், மோடியின் பாதுகாப்பு வாகன வரிசையிலும் இடம்பெறவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

Next Story