இந்தியாவை பிரிக்க விரும்புவது பாஜகதான்: மெகபூபா முப்தி
நச்சு கொள்கையை கடைப்பிடிக்கும் பாஜகதான், இந்த நாட்டை பிரிக்க விரும்புகிறது என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி கூறினார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, அந்த மாநிலத்துக்கு தனி பிரதமர் தேவை என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்த கருத்தை குறிப்பிட்டு பேசினார்.
அப்துல்லா குடும்பத்தினரும், முப்தி குடும்பத்தினரும் ஜம்மு-காஷ்மீரை மூன்று தலைமுறைகளாக சீரழித்துவிட்டனர். அவர்கள் ஒன்று திரண்டு, என்னை எவ்வளவு வேண்டுமானாலும் தூற்றலாம். ஆனால், அவர்களால் இந்த நாட்டை பிரிக்க முடியாது. அதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று பிரதமர் மோடி பேசினார்.
அவரது இந்த கருத்தை விமர்சித்து, டுவிட்டரில் மெகபூபா முப்தி வெளியிட்ட பதிவில், முஸ்லிம்கள், சிறுபான்மையினரை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்ற நச்சு கொள்கையை கடைப்பிடிப்பதன் மூலம் பாஜகதான் நாட்டை பிரிக்க விரும்புகிறது” என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story