ஜம்மு காஷ்மீர்: மெகபூபா முப்தி வாகன அணிவகுப்பு மீது கல்வீச்சு


ஜம்மு காஷ்மீர்: மெகபூபா முப்தி வாகன அணிவகுப்பு மீது கல்வீச்சு
x
தினத்தந்தி 15 April 2019 2:05 PM IST (Updated: 15 April 2019 2:05 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி வாகன அணிவகுப்பு மீது மர்ம நபர்கள் கல் வீசினர்.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி, இன்று காலை அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள கைர்ராம் என்ற புனிததலத்திற்கு சென்றுவிட்டு பிஜ்பேஹரா திரும்பிக்கொண்டு இருந்தார்.

அப்போது, அவரது வாகன அணிவகுப்பு மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில், வாகன அணிவகுப்பில் சென்ற ஒரு கார் சேதம் அடைந்தது. காரின் ஓட்டுநர் காயம் அடைந்தார். மெகபூபா முப்தி உள்பட பிற நபர்கள் காயமின்றி தப்பினர். 

மெகபூபா முப்தி நடந்து வரும் மக்களவை தேர்தலில், அனந்தநாக் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த  2014 ஆம் ஆண்டு இதே தொகுதியில், மெகபூபா முப்தி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அனந்தநாக்  மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 29 முதல் மே 6 ஆம் தேதி வரை 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

Next Story