உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘நிர்பய்’ ஏவுகணை வெற்றிகரமாக சோதனை


உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘நிர்பய்’ ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
x
தினத்தந்தி 15 April 2019 3:28 PM GMT (Updated: 15 April 2019 3:28 PM GMT)

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘நிர்பய்’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட ‘நிர்பய்’ ஏவுகணை தொடர்ந்து சோதிக்கப்பட்டு வருகிறது.

அணு ஆயுதங்களையும் ஏந்திச் செல்லும் திறன்பெற்ற இந்த ஏவுகணை 1000 முதல் 1500 கி.மீ. வரையிலான தொலைவு வரை சென்று தாக்கும் வல்லமை உடையதாகும். இந்த ஏவுகணை கடந்த 2017–ம் ஆண்டு வெற்றிகரமாக  சோதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. ஒடிசாவின் பாலசோர் அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை வெற்றிகரமாக தனது இலக்கை தாக்கி அழித்தது.

Next Story