ஆம் ஆத்மி கட்சிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயார் - ராகுல் காந்தி
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi
புதுடெல்லி,
வரும் நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில், “ ஆம் ஆத்மிகட்சியுடன் காங்கிரஸ் கட்சி டெல்லியில் கூட்டணி வைப்பதற்கு பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்கிற ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும். இதற்காக ஆம் ஆத்மி கட்சிக்கு 4 சீட்டுகளை ஒதுக்குவதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது. ஆனால் கெஜ்ரிவால் இதற்கு உடன்படவில்லை. எங்களது கதவுகள் திறந்தே இருக்கின்றன. ஆனால் அவகாசம் குறைவாக இருக்கிறது” என கூறியுள்ளார்.
டெல்லியை பொறுத்த வரையில் கருத்துக்கணிப்புகள் அடிப்படையில், ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்துப் போட்டியிட்டால் அது பா.ஜனதாவுக்கு சாதகமாக அமையும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story