தேசிய செய்திகள்

பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி + "||" + I support BJP, says Ravindra Jadeja after his father and sister join Congress

பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி

பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி
பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும் , சிஎஸ்கே அணி வீரருமான ரவிந்திர ஜடேஜா குஜராத்தின் ஜாம்நகரைச் சேர்ந்தவர். இவரின் மனைவி ரிவாபா, கடந்த மாதம் 3-ம் தேதி ஜாம்நகரில் பாஜக எம்.பி. பூனம்பென் மாடம் முன்னிலையில் இணைந்தார்.

இந்நிலையில், ஜாம்நகர் மாவட்டம், கலாவட் நகரில்  நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் பேரணி நடந்தது. அப்போது, ரவிந்திர ஜடேஜாவின் தந்தை அனிருதுசிங், சகோதரி நைனாபா ஆகியோர் பட்டிதார் சமூகத்தின் தலைவர் ஹர்திக் படேல் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இரு வேறு கட்சியில் இணைந்தனர். அதாவது,  ரவிந்திர ஜடேஜாவின் மனைவி பாஜகவிலும், அவருடைய  தந்தை, சகோதரியும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது பெரும் வியப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில்,  தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரவிந்திர ஜடேஜா, " நான் பாஜகவை ஆதரிக்கிறேன்" என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், ஜடேஜா பாஜகவில் சேர்ந்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் ஜடேஜாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் "நன்றி ஜடேஜா, உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கு ஜடேஜாவுக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்; பிரதமர் மோடி
பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
2. ஜெட்லி மரணத்தால் பாதிப்பில்லை: பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடரும் - மத்திய அரசு தகவல்
ஜெட்லி மரணத்தால் பாதிப்பில்லை என்றும், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடரும் என்றும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
3. அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு - இம்ரான்கான் மீது மறைமுக குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.
4. வருகிற 22-ந்தேதி பிரதமர் மோடி பிரான்ஸ் பயணம்: ஜி-7 மாநாட்டிலும் பங்கேற்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக 22-ந்தேதி (வியாழக்கிழமை) பிரான்ஸ் நாட்டுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ஜி-7 மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார்.
5. இந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பில் உலகநாடுகள் கவனம் செலுத்த வேண்டும் - இம்ரான் கான் சொல்கிறார்
இந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பில் உலகநாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.