தேசிய செய்திகள்

மெட்ரோ ரெயில் கதவில் சேலை சிக்கி இழுத்து செல்லப்பட்ட பெண்; டெல்லியில் பரபரப்பு + "||" + With saree stuck in metro train door, woman gets dragged on platform

மெட்ரோ ரெயில் கதவில் சேலை சிக்கி இழுத்து செல்லப்பட்ட பெண்; டெல்லியில் பரபரப்பு

மெட்ரோ ரெயில் கதவில் சேலை சிக்கி இழுத்து செல்லப்பட்ட பெண்; டெல்லியில் பரபரப்பு
டெல்லி மெட்ரோ ரெயில் கதவில் சேலை சிக்கி பெண் ஒருவர் நடைமேடையில் இழுத்து செல்லப்பட்டது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,

டெல்லியின் இந்தர்லோக் அருகே சாஸ்திரி நகர் பகுதியில் வசித்து வருபவர் கீதா (வயது 40).  இவர் தனது மகளுடன் நவாடா பகுதியில் இருந்து மோதி நகர் நோக்கி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளார்.

அவர் ரெயில் நிலையத்தில் இறங்கியுள்ளார்.  ரெயிலின் கதவு மூடும்பொழுது அவரது சேலை அதில் சிக்கி கொண்டது.  இதனால் அதனை வெளியே எடுக்க முயற்சித்துள்ளார்.  ஆனால் அது பலன் தரவில்லை.  இதன்பின் ரெயில் கிளம்பி சென்றுள்ளது.

அவர் சில மீட்டர் தொலைவுக்கு நடைமேடையில் இழுத்து செல்லப்பட்டு உள்ளார்.  இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.  பயணிகளில் ஒருவர் அவசரகால பட்டனை அழுத்தி ஓட்டுனருக்கு எச்சரிக்கை அளித்து உள்ளார்.

இதன்பின்னர் ரெயில் நிறுத்தப்பட்டு உள்ளது.  உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.  இந்த சம்பவத்தினை அடுத்து ரெயில் சேவை பாதிப்படைந்தது.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.