தேசிய செய்திகள்

வாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியிட பிரியங்கா தயார் - ராபர்ட் வதேரா + "||" + Priyanka ready to contest from Varanasi Vadra

வாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியிட பிரியங்கா தயார் - ராபர்ட் வதேரா

வாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியிட பிரியங்கா தயார் - ராபர்ட் வதேரா
வாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியிட பிரியங்கா தயார் என ராபர்ட் வதேரா கூறியுள்ளார்.
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. பிரியங்காவை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ரேபரேலியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரியங்காவும், “வாரணாசியில் போட்டியிட வேண்டாமா?” என்ற கேள்வியை எழுப்பினார். இதனையடுத்து பிரியங்கா வாரணாசியில் போட்டியிடலாம் என்ற யூகம் வலுத்தது. பிரியங்கா போட்டியிடுவது தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை என காங்கிரஸ் தலைவர்கள் மட்டத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா பேசுகையில், வாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியிட பிரியங்கா தயார் என குறிப்பிட்டுள்ளார்.  இந்தியா டுடேவிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “வாரணாசியில் போட்டியிட பிரியங்கா தயார்” என கூறியுள்ளார். 

பிரியங்கா போட்டியிடுவாரா? மாட்டாரா? என்ற யூகங்களுக்கு மத்தியில் ராபர்ட் வதேராவின் இந்த பேட்டி அவர் போட்டியிட உள்ளார் என்பதை காட்டுகிறது. 

போட்டியிட பிரியங்காவும் சம்மதம் தெரிவித்துவிட்டார் என கூறியுள்ள ராபர்ட் வதேரா, போட்டியிடுவது தொடர்பாக கட்சியின் தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. வாரணாசி தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். #PMModi #Varanasi
2. வாரணாசியில் ஆதரவாளர்களுடன் ஆறு கி.மீ. தூரம் வரை பேரணியாக சென்ற பிரதமர் மோடி
பிரதமர் மோடி 2-வது முறையாக போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று மெகா பேரணி நடந்தது.
3. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. #PMmodi #LokSabhaElections2019
4. வெற்றியோ, தோல்வியோ மோடியை எதிர்த்து போட்டியிட பிரியங்கா தயார்
வெற்றியோ, தோல்வியோ வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட தயார் என கட்சி தலைமையிடம் பிரியங்கா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #PriyankaGandhi #Varanasi #Congress #2019Elections
5. பிரதமர் ஆவேன் என்று நான் நினைத்ததே இல்லை : அக்‌ஷய் குமாரிடம் மனம் திறந்த மோடி
பிரதமராக வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை என்று அக்‌ஷய் குமாருடனான கலந்துரையாடலில் மோடி தெரிவித்துள்ளார்.