தேசிய செய்திகள்

வாக்குச்சாவடியில் மோடி கேமரா வைத்துள்ளார் : வாக்காளர்களை மிரட்டும் பா.ஜனதா எம்.எல்.ஏ. + "||" + BJP lawmaker in Gujarat threatens people to vote for his party

வாக்குச்சாவடியில் மோடி கேமரா வைத்துள்ளார் : வாக்காளர்களை மிரட்டும் பா.ஜனதா எம்.எல்.ஏ.

வாக்குச்சாவடியில் மோடி கேமரா வைத்துள்ளார் : வாக்காளர்களை மிரட்டும் பா.ஜனதா எம்.எல்.ஏ.
வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி கேமராவை வைத்துள்ளார் என பா.ஜனதா எம்.எல்.ஏ. வாக்காளர்களை மிரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.
குஜராத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. ரமேஷ் காத்ரா வாக்காளர்களிடம் பேசுகையில், தாமரை சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக் கொள்கிறேன். பிரதமர் மோடி வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார். நீங்கள் பா.ஜனதா வேட்பாளர் ஜஸ்வந்த் சிங் புகைப்படத்தை வாக்குப்பதிவு இயந்திரத்தில் பார்க்கலாம். அங்கு தாமரை சின்னம் இருக்கும் அதில் உள்ள பட்டனை அழுத்த வேண்டும். இப்போது நீங்கள் தவறு செய்ய வழியே கிடையாது. ஏனென்றால் பிரதமர் மோடி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார்.

யார் பா.ஜனதாவுக்கு வாக்களித்தார், யார் காங்கிரசுக்கு வாக்களித்தார் என்பதை பார்த்துக் கொள்ள முடியும். ஆதார் கார்டு உள்பட நீங்கள் வைத்திருக்கும் கார்டுகள் அனைத்திலும் புகைப்படம் உள்ளது. உங்களுடைய வாக்குச்சாவடியில் குறைவான வாக்குகள் பதிவானால், பிரதமர் மோடிக்கு யார் வாக்களிக்கவில்லை என்பது தெரிய வரும். பின்னர் உங்களுக்கு வேலை கிடைக்காது என கூறியுள்ளார். 

பா.ஜனதாவிற்கு வாக்களிக்கவில்லை என்றால் வேலை கிடைக்காது என்று மிரட்டும் தொனியில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. குஜராத்தில் பிரதமர் மோடியின் தாயார் வாக்களித்தார்
குஜராத்தில் பிரதமர் மோடியின் தாயார் வாக்களித்தார்.
2. மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: தனது வாக்கை பதிவு செய்த பின் பிரதமர் மோடி பேட்டி
மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
3. ஹர்திக் படேலை கன்னத்தில் அறைந்த நபரால் பரபரப்பு
குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிக்கொண்டு இருந்த ஹர்திக் படேல் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
4. குஜராத்தில் மேலும் 4 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர் அறிவிப்பு
குஜராத்தில் மேலும் 4 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
5. குஜராத்தில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தானியர் சிக்கினார்
குஜராத்தில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தானியர் ஒருவர் எல்லை பாதுகாப்பு படையினரிடம் சிக்கினார்.