‘துலாபாரம்’ நிகழ்ச்சியில் காயம்: சசிதரூரை சந்தித்து நிர்மலா சீதாராமன் நலம் விசாரிப்பு
‘துலாபாரம்’ நிகழ்ச்சியில் காயம் அடைந்த சசிதரூரை சந்தித்து நிர்மலா சீதாராமன் நலம் விசாரித்தார்.
திருவனந்தபுரம்,
முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர், திருவனந்தபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் அங்குள்ள காந்தாரி அம்மன் கோவிலில், துலாபாரமாக, தனது எடைக்கு எடை சர்க்கரை காணிக்கையாக அளிக்க முயன்றபோது, தராசின் இரும்பு கம்பி தலையில் பட்டு சசிதரூர் காயம் அடைந்தார். அவர் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், கேரளாவில் பிரசாரம் செய்ய சென்ற ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், ஆஸ்பத்திரியில் சசிதரூரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதை சசிதரூர், தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், நிர்மலா சீதாராமனின் அன்பால் நெகிழ்ந்து விட்டதாகவும், மரியாதையை கடைபிடித்து முன்னுதாரணமாக திகழ்வதாகவும் கூறியுள்ளார்.
சசிதரூரை எதிர்த்து போட்டியிடும் இடதுசாரி கூட்டணி வேட்பாளர் திவாகரனும் அவரிடம் நலம் விசாரித்தார்.

Related Tags :
Next Story