எல்லை கட்டுப்பாட்டு பகுதியை தாண்டிய வர்த்தகம் மீண்டும் தொடக்கம்


எல்லை கட்டுப்பாட்டு பகுதியை தாண்டிய வர்த்தகம் மீண்டும் தொடக்கம்
x
தினத்தந்தி 17 April 2019 1:47 AM GMT (Updated: 17 April 2019 2:06 AM GMT)

ஜம்முவில் உள்ள பூஞ்ச் - ஆக்கிரமிப்பு காஷ்மீர் ரவாலாகோட் பகுதிகளுக்கு இடையேயான வர்த்தகம் மீண்டும் தொடங்கியது.

ஜம்மு,

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி எல்லைக்கட்டுபாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பூஞ்ச் பகுதியில் பிஎஸ்எஃப் வீரர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 5 பாதுகாப்புப் படையினர் உள்பட 24 பேர் படுகாயமடைந்தனர். இதன் காரணமாக பூஞ்ச்- ராவலாகோட் பகுதிகளுக்கிடையே நடைபெற்று வந்த பயணிகள் பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

2 வாரங்களுக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பயணிகள் வாகனப்போக்குவரத்து மற்றும் எல்லைத் தாண்டிய வர்த்தகம் மீண்டும் நேற்று முதல் தொடங்கியது.  இதைத்தொடர்ந்து, எல்லைக்கட்டுபாட்டுக் கோட்டை கடந்து நேற்று ஒரே நேரத்தில் 70 சரக்கு லாரிகள் எல்லையைக் கடந்து பொருள்களை ஏற்றி சென்றது. பல்வேறு இழப்புகளுக்கு ஆளாகியிருந்த வணிகர்கள், மீண்டும் வர்த்தகம் தொடங்கியதால் உற்சாகமடைந்துள்ளனர்.

மீண்டும் போக்குவரத்து தொடங்கியதால் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இருந்து 35 லாரிகள் மூலம் உலர் பேரீச்சை, பாதாம் மற்றும் எம்ப்ராய்டரி துணி வகைகள், ஆயுர்வேத மூலிகைகள், கிழங்கு, பிஸ்தா போன்றவை கொண்டு செல்லப்பட்டன. மறு மார்க்கத்தில் பூஞ்ச் பகுதியில் இருந்து சுமார் 35 லாரிகள் மூலம் சீரகம், பழங்கள், மூலிகைகள் மற்றும் பல்வேறு பொருள்களும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Next Story