கடன் மறுக்கப்பட்டதை அடுத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை முற்றிலும் நிறுத்தியது


கடன் மறுக்கப்பட்டதை அடுத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை முற்றிலும் நிறுத்தியது
x
தினத்தந்தி 17 April 2019 2:54 PM GMT (Updated: 17 April 2019 2:54 PM GMT)

கடன் மறுக்கப்பட்டதை அடுத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை முற்றிலுமாக நிறுத்தியது.



கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் படிப்படியாக சேவையை துண்டிக்க தொடங்கியது. பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் தவித்த ஜெட் ஏர்வேஸ், வங்கிகளிடம் கடன் கோரியது.

 ஜெட் ஏர்வேஸ் சில மாதங்களாக கேட்கப்பட்ட ரூ. 400 கோடி கடன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜெட் ஏர்வேஸ் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மும்பையிலிருந்து அமிர்தசரஸ் செல்லும் விமான சேவைதான் கடைசியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 விமானங்களை மட்டுமே இயக்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story