தேர்தல் செய்திகள்

11 மணி நிலவரம்: அசாம்-26.39, சத்தீஷ்கர்- 26.2 சதவீத வாக்குகள் பதிவு + "||" + Voter turnout till 11 AM in Assam is 26.39%, in Chhattisgarh is 26.2%.

11 மணி நிலவரம்: அசாம்-26.39, சத்தீஷ்கர்- 26.2 சதவீத வாக்குகள் பதிவு

11 மணி நிலவரம்: அசாம்-26.39, சத்தீஷ்கர்- 26.2 சதவீத வாக்குகள் பதிவு
11 மணி நிலவரப்படி அசாமில் 26.39 சதவீத வாக்குகளும், சத்தீஷ்கரில் 26.2 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
கவுகாத்தி,

முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த 11-ஆம் தேதி 91 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. 

எனவே இன்று 12 மாநிலங்களில் உள்ள  95 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. அவை விவரம் வருமாறு:-தமிழ்நாட்டில் 38, புதுச்சேரியில் 1, கர்நாடகத்தில் 14, மராட்டியத்தில் 10, உத்தரபிரதேசத்தில் 8, அசாம், பீகார், ஒடிசாவில் தலா 5, சத்தீஷ்கார் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 3, காஷ்மீரில் 2, மணிப்பூரில் ஒரு தொகுதி என மொத்தம் 95 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. காலை 11 மணி நிலவரப்படி, அசாமில் 26.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சத்தீஷ்கரில் 26.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் 11 மணி நிலவரப்படி 24.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. பீகாரில் 11 மணி நிலவரப்படி 18.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மணிப்பூரில் 11 மணி நிலவரப்படி 32.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. காஷ்மீரில் 17.8 சதவீத வாக்குகள் 11 மணி நிலவரப்படி பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் இரு பிரிவினர் இடையே மோதல்: ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு
அசாம் மாநிலம், ஹைலகண்டி நகரில் வெள்ளிக்கிழமை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 15 பேர் படுகாயமடைந்த நிலையில் அங்கு காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
2. மாட்டிறைச்சி உணவு விற்பனை: இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் 8 பேர் கைது
அசாமில் மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்த இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. அசாம் ஓட்டலில் மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்த இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல்
அசாமில் ஓட்டலில் மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்த இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
4. கனமழை, இடியை பொருட்படுத்தாமல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட காவலர்!
கனமழை, இடியை பொருட்படுத்தாமல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட காவலருக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
5. சத்தீஷ்கரில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஷ்கரில் 4 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற என்கவுண்டரின் போது சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.