தேசிய செய்திகள்

பா.ஜனதா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது ஷூ வீச்சு + "||" + Shoe hurled at BJP leader GVL Rao during media briefing at party headquarters in Delhi

பா.ஜனதா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது ஷூ வீச்சு

பா.ஜனதா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது ஷூ வீச்சு
பா.ஜனதா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மீது ஷூ வீசப்பட்டது.
மராட்டிய மாநிலம் மாலேகானில் கடந்த 2008-ல் குண்டுவெடிப்பு நடந்ததில் கைது செய்யப்பட்டவர் சாத்வி பிரக்யா தாக்கூர். இவரை குற்றப்பத்திரிகையில் இருந்து தேசிய புலனாய்வு முகமை  2016 மே மாதம் நீக்கியது. ஆனால் நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து பிரக்யா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு எதிராக பிற குற்ற வழக்குகள் விசாரணையில் உள்ளது.

பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பிரக்யாவை போபால் வேட்பாளராக பா.ஜனதா நிறுத்தியுள்ளது. 1989-ல் இருந்து பா.ஜனதாவின் கோட்டையாக இருந்து வரும் போபாலில் களமிறக்கப்பட்டுள்ளார் பிரக்யா.

பிரக்யாவை வேட்பாளராக நிறுத்தும் அறிவிப்பை டெல்லி பா.ஜனதா தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர் நரசிம்ம ராவ் வெளியிட்டார். அப்போது ஒருவர் நரசிம்ம ராவ் மீது ஷூவை வீசியுள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளது. ஷூ வீசிய நபர் தன்னை ஒரு மருத்துவர் என அடையாளப்படுத்தியுள்ளார். அவரை உடனடியாக பாதுகாவலர்கள் வெளியேற்றியுள்ளனர். அவர் ஏன் ஷூவை வீசினார்? என்பது தொடர்பான தகவல் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. திருமணம் செய்ய மறுத்த காதலர் மீது ஆசிட் வீசிய பெண்
டெல்லியில் திருமணம் செய்ய மறுத்த காதலர் மீது பெண் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற குமாரசாமி, பிரதமர் மோடியுடன் சந்திப்பு
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்-மந்திரி குமாரசாமி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
3. பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை ஜூலை 6-ந் தேதி தொடங்குகிறது
பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை ஜூலை 6-ந் தேதி தொடங்க உள்ளது.
4. ஜிந்தால் நிறுவனத்திற்கு வழங்கிய நிலத்தை திரும்ப பெறக்கோரி அரசுக்கு எதிராக பெங்களூருவில் பா.ஜனதாவினர் போராட்டம்
ஜிந்தால் நிறுவனத்திற்கு வழங்கிய நிலத்தை திரும்ப பெறக்கோரி அரசுக்கு எதிராக பெங்களூருவில் பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விதானசவுதாவை முற்றுகையிட சென்ற ஆர்.அசோக் உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
5. பா.ஜனதாவின் வளர்ச்சியை தடுக்க மம்தா பானர்ஜி அரசியல் நிபுணருடன் ஆலோசனை
பா.ஜனதாவின் வளர்ச்சியை தடுக்க மம்தா பானர்ஜி அரசியல் நிபுணருடன் ஆலோசனை நடத்தினார்.