தேசிய செய்திகள்

தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால், விரலை வெட்டிக்கொண்ட இளைஞர் + "||" + Uttar Pradesh: Man allegedly cuts off his finger after he inadvertently votes for BJP instead of BSP

தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால், விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்

தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால், விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்
பாஜகவுக்கு தவறுதலாக வாக்களித்து விட்டதால், தனது விரலை உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.
புலந்த்சஹர்,

மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றன. புலந்த்சஹரில் இக்கூட்டணி சார்பில் யோகேஷ் சர்மா என்ற வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.

புலந்த்சஹரின் சாந்திபூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அப்துலாபூர் ஹுலஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பவன் குமார். 25 வயதான இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். பகுஜன் சமாஜ் சார்பில் யோகேஷ் சர்மாவுக்கு வாக்களிக்க பவன்குமார் திட்டமிட்டு இருந்தார். ஆனால், வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கும் போது, தவறுதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக வேட்பாளர் போலா சிங்குக்கு வாக்களித்து விட்டார்.  இதனால், மிகுந்த மனவேதனைக்குள்ளாகிய பவன்குமார். விரக்தியில் ஆள்காட்டி விரலையே துண்டித்துக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து பவன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பவன் குமார் இதுதொடர்பாக டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். தற்போது அந்த டுவிட் வைரலாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. பாஜக வெற்றி பெற புல்வாமா போன்ற தாக்குதல் தேவைப்படும் - சரத்பவார்!
மராட்டிய தேர்தலில், பாஜக வெற்றி பெற வேண்டுமானால் புல்வாமா போன்ற தாக்குதல்கள் மட்டுமே கைகொடுக்கும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் குற்றஞ்சாட்டி உள்ளார்.
2. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட அமித்ஷா
பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவு பணியில் ஈடுபட்டார்.
3. துப்பாக்கி முனையில் மிரட்டி மருமகள் பாலியல் பலாத்காரம் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்கு
துப்பாக்கி முனையில் மிரட்டி மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
4. உன்னோவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. பாஜகவில் இருந்து நீக்கம்
உன்னோவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
5. மராட்டியம்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா- பா.ஜனதாவில் இன்று சேர உள்ளதாக தகவல்
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் இன்று பா.ஜனதாவில் சேருகிறார்கள்.