நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்


நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
x
தினத்தந்தி 20 April 2019 11:33 AM IST (Updated: 20 April 2019 11:33 AM IST)
t-max-icont-min-icon

தனக்கு எதிராக, நீதிமன்ற பெண் ஊழியர் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, முன்னாள்  பெண் ஊழியர்  ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். தலைமை நீதிபதி மீது வைக்கப்பட்ட இந்த பாலியல் குற்றச்சாட்டு, நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்துள்ளார்.  நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. எனது பணிக்காலம் முடியும் வரை பயமின்றி செயல்படுவேன். அடுத்த வாரம் சில முக்கிய வழக்குகளை விசாரிக்க உள்ளதால் தன் மீது பாலியல் புகார் சுமத்தப்படுகிறது” என்றார். 

Next Story