என்னை கொடுமைப்படுத்தியவர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் - பா.ஜனதா வேட்பாளர் சாத்வி ஆவேசம்


என்னை கொடுமைப்படுத்தியவர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் - பா.ஜனதா வேட்பாளர் சாத்வி ஆவேசம்
x
தினத்தந்தி 21 April 2019 3:08 AM IST (Updated: 21 April 2019 3:08 AM IST)
t-max-icont-min-icon

என்னை கொடுமைப்படுத்தியவர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜனதா வேட்பாளர் சாத்வி தெரிவித்துள்ளார்.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் போபால் பா.ஜனதா பெண் வேட்பாளர் சாத்வி பிரக்யா, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்கரே என்னை சித்ரவதை செய்ததால் நீங்கள் அழிந்துபோவீர்கள் என்று சாபமிட்டேன். அடுத்த மாதம் அவர் மும்பை பயங்கரவாத தாக்குதலில் பலியாகிவிட்டார் என்று கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியது. பா.ஜனதா அது அவரது சொந்த கருத்து என்று தெரிவித்தது.

எதிர்ப்பு கிளம்பியதால் சாத்வி மன்னிப்பு கேட்டதுடன், தனது கருத்தையும் திரும்பப் பெற்றார். இந் நிலையில் நேற்று பத்திரிகையாளர்கள் இதுபற்றி கருத்து கேட்க அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது ஆவேசமடைந்த சாத்வி, “என்னை 9 வருடங்களாக சித்ரவதை செய்தவர்களை உங்களால் மன்னிப்பு கேட்கவைக்க முடியுமா? நான் ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டேன். என்னை சித்ரவதை செய்தவர்களிடம் இருந்து மன்னிப்பு கேட்க உங்களுக்கு அதிகாரம் வழங்குகிறேன்” என்றார். அவரது இந்த கருத்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


Next Story