ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம் கட்சி வேட்பாளர் மரணம்


ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம் கட்சி வேட்பாளர் மரணம்
x
தினத்தந்தி 21 April 2019 3:45 AM IST (Updated: 21 April 2019 3:45 AM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம் கட்சி வேட்பாளர் ஒருவர் மரணமடைந்தார்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது. அங்குள்ள பட்குரா சட்டமன்ற தொகுதியில் பிஜூ ஜனதாதளம் கட்சி சார்பில் பெட் பிரகாஷ் அகர்வால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்தநிலையில், அவர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று காலை சிகிச்சை பலனின்றி அகர்வால் உயிரிழந்தார். அவருக்கு வயது 82.

Next Story