தேசிய செய்திகள்

திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் + "||" + Saddened by the loss of lives due to the stampede at a temple in Thuraiyur PM Modi

திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்
திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையத்தில் கோவில் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 7 பேர் இறந்தனர். பூசாரியிடம் பிடிக்காசு வாங்க முயன்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து உள்ளது.  

நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணமாக பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார். சாத்தியமான உதவிகள் அனைத்தும் அதிகாரிகளால் கொடுக்கப்பட்டுள்ளது. நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. அபுதாபியில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு அமீரக அரசின் உயரிய விருது வழங்கப்பட்டது
பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் சயாத் விருது வழங்கப்பட்டது.
2. அல்ஜீரியாவில் பயங்கரம்: இசை கச்சேரியில் கூட்ட நெரிசல்; 5 பேர் உயிரிழப்பு
அல்ஜீரியாவில் இசை கச்சேரி ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
3. ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பிரதமர் மோடி உருவப்படத்தை எரித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, திண்டுக்கல்லில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
4. 2 நாள்கள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி
2 நாள்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி பிரான்சு சென்றடைந்தார்.
5. இந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை : நியூயார்க் டைம்சுக்கு இம்ரான் கான் பேட்டி
இந்தியாவுடன் பேசுவதற்கு இனி ஒன்றுமில்லையென நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு இம்ரான் கான் பேட்டியளித்துள்ளார்.