இலங்கைக்கு சென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 5 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை : உறவினர்கள் வேதனை


இலங்கைக்கு சென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 5 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை : உறவினர்கள் வேதனை
x
தினத்தந்தி 22 April 2019 5:38 AM GMT (Updated: 22 April 2019 5:38 AM GMT)

இலங்கைக்கு சென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 5 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு,

இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் என 8 இடங்களில் அடுத்தடுத்து தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இந்தியர்கள் உள்பட 290 பேர் பலியாகினர்.  இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கைது செய்யப்பட்டவர்களின் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.  

இந்த குண்டு வெடிப்பில், இந்தியர்கள் 6 பேர் பலியானதாக தற்போது வரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  பெங்களூருவிலிருந்து இலங்கைக்கு சென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 5 பேரை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story