தடையை நீக்க கோரி 'டிக் டாக்' நிறுவனம் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்


தடையை நீக்க கோரி டிக் டாக் நிறுவனம் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
x
தினத்தந்தி 22 April 2019 6:36 AM GMT (Updated: 22 April 2019 6:36 AM GMT)

தடையை நீக்க கோரி 'டிக் டாக்' நிறுவனம் தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

'டிக் டாக்' செயலியில் கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் வீடியோக்கள் வருவதால் அதனை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று பொதுநல மனு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கடந்த 3-ந் தேதி ‘டிக் டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 

இதற்கிடையில், 'டிக் டாக்' நிறுவனம் தடையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தடையை நீக்க கோரி 'டிக் டாக்' நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

மேலும், 'டிக் டாக்' நிறுவன மனுவை விசாரித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும், இல்லையெனில், டிக் டாக்கிற்கு விதிக்கப்பட்ட தடை காலாவதியாகி விடும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Next Story