தேசிய செய்திகள்

இலங்கை தாக்குதலை முன்வைத்து காங்கிரசுக்கு எதிராக பிரதமர் மோடி பிரசாரம் + "||" + Modi Uses Sri Lanka Blasts to Attack Congress

இலங்கை தாக்குதலை முன்வைத்து காங்கிரசுக்கு எதிராக பிரதமர் மோடி பிரசாரம்

இலங்கை தாக்குதலை முன்வைத்து காங்கிரசுக்கு எதிராக பிரதமர் மோடி பிரசாரம்
இலங்கை பயங்கரவாத தாக்குதலை முன்வைத்து காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

இலங்கையில் நேற்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பயங்கர சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இவ்விவகாரத்தை வைத்து காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து பிரசாரம் செய்துள்ளார். 

மராட்டிய மாநிலம் திந்தோரியில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி பேசுகையில், “இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நேற்று நடந்துள்ளது. ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுடைய தெய்வத்தை வழிப்பட்ட போது கொல்லப்பட்டுள்ளனர். இதேபோன்ற சூழ்நிலைதான் இந்தியாவில் 2014க்கு முன்னர் இருந்தது. தேசத்தில் எங்கோ ஒரு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்ட வண்ணம் இருந்தது” என காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். 

பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட பதிலடி விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்த பிரதமர் மோடி, அவர்கள் வடிப்பது எல்லாம் போலி கண்ணீர் என குறிப்பிட்டார். 

காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இரங்கல் கூட்டங்கள் நடத்துவதிலும், பாகிஸ்தான் பற்றி பேசி உலகம் முழுவதும் சென்று அழவும் மட்டும்தான் தெரியும். ஆனால் இப்போதைய காவலாளி பாகிஸ்தானுக்குள் சென்றே தாக்குதலை நடத்தியுள்ளார். அதன் பதிலாக பயங்கரவாதம் ஜம்மு காஷ்மீரில் சில மாவட்டங்களுடன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படையினரால் வேட்டையாடும் காலம் வெகுதொலைவில் இல்லை என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் நாற்காலி யாருக்கு?
தேசிய கட்சிகளான பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் கவுரவமான எண்ணிக்கையில் இடங்கள் கிடைக்காத பரிதாப நிலை ஏற்பட்டு, மாநில கட்சிகளின் கை ஓங்கினால் சிலர் பிரதமர் பதவிக்கு வரிசை கட்டி நிற்பார்கள்.
2. கேதர்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் - இன்று பத்ரிநாத் செல்கிறார்
நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி கேதர்நாத் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து அவர் இன்று பத்ரிநாத் செல்ல உள்ளார்.
3. நாட்டின் முக்கிய அமைப்புகளின் புனிதத்தை மோடி அழிக்கிறார் - காங்கிரஸ் கருத்து
தேர்தல் ஆணைய பிரச்சனையில் நாட்டின் முக்கிய அமைப்புகளின் புனிதத்தை மோடி அழிக்கிறார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
4. நாங்கள் கடந்து வந்த பாதை எளிதானதல்ல; 5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளேன் - பிரதமர் மோடி உருக்கம்
நாங்கள் கடந்து வந்த பாதை எளிதானதல்ல; 5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளேன் என பிரதமர் மோடி உருக்கமாக பேசினார்.
5. பிரக்யாசிங்கை மன்னிக்கவே மாட்டேன் - பிரதமர் மோடி
மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே தேசபக்தர் என்ற சர்ச்சை கருத்தை தெரிவித்த பிரக்யாசிங்கிற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.