தேசிய செய்திகள்

நடுவழியில் நின்ற பேருந்து; மாற்று பேருந்து கேட்ட பயணிகளுக்கு அடி, உதை + "||" + Three held for attack on bus passengers in Kerala

நடுவழியில் நின்ற பேருந்து; மாற்று பேருந்து கேட்ட பயணிகளுக்கு அடி, உதை

நடுவழியில் நின்ற பேருந்து; மாற்று பேருந்து கேட்ட பயணிகளுக்கு அடி, உதை
கேரளாவில் நடுவழியில் பேருந்து நின்ற நிலையில் மாற்று பேருந்து கேட்ட பயணிகளுக்கு அடி, உதை விழுந்துள்ளது.
கொச்சி,

கேரளாவில் பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற தனியார் நிறுவன பேருந்து ஒன்று ஆலப்புழா மாவட்டத்தின் ஹரிபாதம் பகுதியில் திடீரென நடுவழியில் நின்றது.  இதனால் மாற்று பேருந்து அனுப்பி வைக்கப்படும்.  அதுவரை காத்திருங்கள் என பயணிகளிடம் கூறப்பட்டு உள்ளது.

ஆனால் நீண்டநேரம் வேறு பேருந்து எதுவும் வரவில்லை.  இதனால் பயணிகளில் 3 பேர் மாற்று பேருந்து வர காலதாமதம் ஏற்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.  இதன்பின் மாற்று பேருந்து வந்து பயணிகளை ஏற்றி கொண்டு நேராக பேருந்து நிறுவன அலுவலகத்திற்கு சென்றது.

அங்கு பேருந்து நிறுவன மேலாளர் மற்றும் ஊழியர்கள் 2 பேர் சேர்ந்து கொண்டு 3 பயணிகளையும் அடித்து உதைத்துள்ளனர்.  இதில் பலத்த காயமடைந்த அவர்கள் மராடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பேருந்து பயணிகளில் ஒருவர் பயணிகள் தாக்கப்படும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து உள்ளார்.  இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.  இதனை அடுத்து தனியார் டிராவல்ஸ் நிறுவன பேருந்தினை பறிமுதல் செய்ய கொச்சி நகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டு உள்ளார்.

பேருந்து உரிமையாளர் மற்றும் தாக்குதல் நடத்திய ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை உயர் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.  பேருந்து நிறுவன மேலாளர் மற்றும் 2 ஊழியர்கள் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இமாசல பிரதேசத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் பயணம் செய்த பேருந்து கவிழ்ந்தது; 7 பேர் காயம்
இமாசல பிரதேசத்தில் பா.ஜ.க. தொண்டர்களை ஏற்றி கொண்டு சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 7 பேர் காயமடைந்தனர்.
2. கோடைவிடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
கோடைவிடுமுறையையொட்டி நேற்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் பயணம் செய்ய அவர்கள் ஆர்வம் காட்டினர்.
3. ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி
ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் லாரி மீது பேருந்து மோதியதில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
4. கஜகஸ்தானில் பேருந்து விபத்து; 11 பேர் பலி
கஜகஸ்தானில் பேருந்து விபத்தில் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர்.
5. பெரு நாட்டில் பேருந்து தீப்பிடித்ததில் 20 பயணிகள் கருகி பலி
பெரு நாட்டில் பேருந்து ஒன்று தீப்பிடித்ததில் அதில் பயணித்த 20 பேர் உடல் கருகி பலியாகினர்.