தேசிய செய்திகள்

மக்களவை தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் பிரதமர் மோடி + "||" + PM Narendra Modi after casting his vote at a polling booth in Ranip,Ahmedabad

மக்களவை தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் பிரதமர் மோடி

மக்களவை தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் பிரதமர் மோடி
நாடாளுமன்ற தேர்தலுக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார்.
அகமதாபாத்,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல் 2 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.   கேரளா (20 தொகுதிகள்), குஜராத் (26), கோவா (2), அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கார் (7), கர்நாடகம் (14), மராட்டியம் (14), ஒடிசா (6), உத்தரபிரதேசம் (10), மேற்கு வங்காளம் (5), காஷ்மீர் (1), திரிபுரா (1), தத்ராநகர் ஹவேலி (1), டாமன் டையூ (1) ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள  நிஸான் பள்ளி வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி தனது வாக்கை பதிவு செய்தார். முன்னதாக, காந்தி நகர் சென்ற பிரதமர் மோடி தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றார்.  பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்
கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
2. பிரதமர் நரேந்திர மோடி வருகிற 21-ந் தேதி அமெரிக்கா பயணம்
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 21-ந் தேதி அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.
3. கடந்த 100 நாட்களில் நாடு டிரைலரை மட்டுமே பார்த்துள்ளது... முழுப் படமும் இனிமேல்தான்... மோடியின் "ரஜினி பஞ்ச்"
ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 100 நாட்களில் நாடு டிரைலரை மட்டுமே பார்த்துள்ளது... முழுப்படமும் இனிமேல்தான் என கூறினார்.
4. பயங்கரவாதத்தின் சவாலை சமாளிக்க இந்தியாவிடம் முழு திறனும் உள்ளது -பிரதமர் மோடி
பயங்கரவாதத்தின் சவாலை சமாளிக்க இந்தியாவிடம் முழு திறனும் உள்ளது என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
5. பிரதமர் மோடிக்கு வழங்கிய அன்பளிப்பு பொருட்கள் ஏல விற்பனைக்கு வருகின்றன
பிரதமர் மோடிக்கு வழங்கிய நினைவு பரிசு மற்றும் அன்பளிப்பு பொருட்கள் ஏல விற்பனைக்கு வருகின்றன.