தேசிய செய்திகள்

வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்ததை பார்த்து மக்கள் ஓட்டம் + "||" + Snake inside VVPAT machine holds up polling in Kannur

வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்ததை பார்த்து மக்கள் ஓட்டம்

வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்ததை பார்த்து மக்கள் ஓட்டம்
கேரளாவில் வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்ததால் பரபரப்பு நேரிட்டது.
கேரளாவில் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. கண்ணூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியொன்றில் மக்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்கக் காத்திருந்தனர்.

வாக்குச்சாவடி மையத்தில் இருந்த ஒப்புகைச் சீட்டு வழங்கும் எந்திரம் ஆடியது. அதிலிருந்து சத்தம் வெளியாகியது. அதற்குள் பாம்பு இருப்பதை கண்ட வாக்களிக்க வந்த ஒருவர் அதிர்ச்சி அடைந்தார்.

பாம்பை பார்த்த பயத்தில் அவர் போட்ட சத்தத்தில் வாக்களிக்க வரிசையில் இருந்த மக்களும், தேர்தல் அறையில் இருந்த அதிகாரிகளும் அலறியடித்து ஓட்டம் பிடிக்க தொடங்கினர்.

பின்னர் போலீசார் வந்து ஒப்புகைச்சீட்டு வழங்கும் எந்திரத்தில் இருந்த பாம்பை வெளியே எடுத்து காட்டுப்பகுதியில் விட்டனர். பின்னர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. பாம்பு இருந்ததால் ஏற்பட்ட பரபரப்பு சம்பவத்தால் சிறிதுநேரம் வாக்குப்பதிவு தடைபட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.487 கோடிக்கு மது விற்பனை
கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.487 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
2. கேரளாவில் மோட்டார் வாகன சட்டத்துக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
கேரளாவில் மோட்டார் வாகன சட்டத்துக்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
3. கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது
கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கேரளாவில் 2 பேர் கைது
பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கேரளாவில் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5. மெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு
மெட்ரோ ரெயிலில் பாம்பு ஒன்று 5 நாள் பயணம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.