தேசிய செய்திகள்

இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 10 இந்தியர்கள் உயிரிழப்பு - சுஷ்மா சுவராஜ் + "||" + 10 Indians killed in Sri Lanka serial blasts

இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 10 இந்தியர்கள் உயிரிழப்பு - சுஷ்மா சுவராஜ்

இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 10 இந்தியர்கள் உயிரிழப்பு - சுஷ்மா சுவராஜ்
இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 10 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று முன்தினம் கிறிஸ்தவ தேவாலயங்கள், சொகுசு விடுதிகள் என மொத்தம் 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின. இதில் 310 பேர் மரணம் அடைந்து உள்ளனர். 450-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா சென்றவர்களும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்கியுள்ளனர். கர்நாடகாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜனதா தளம் (எஸ்) கட்சியினரும் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 10 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 2-வது டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச முடிவு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.
2. ‘இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் குறைந்து வருகிறது’ - டிரம்ப் பேட்டி
“இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பதற்றம் குறைந்து வருகிறது” என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.
3. இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோத இருந்த முதலாவது 20 ஓவர் போட்டி மழையால் ரத்து
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையே தர்மசாலாவில் நடக்க இருந்த முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்தானது.
4. இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி: தர்மசாலாவில் இன்று நடக்கிறது
இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் இன்று நடக்கிறது.
5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்
பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.