தேசிய செய்திகள்

பில்கிஸ் பானுவுக்கு ரூ. 50 லட்சம் வழங்க குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + "||" + SC Orders Gujarat to Give Rs 50 Lakh Compensation Job to 2002 Riots Victim

பில்கிஸ் பானுவுக்கு ரூ. 50 லட்சம் வழங்க குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பில்கிஸ் பானுவுக்கு ரூ. 50 லட்சம் வழங்க குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு ரூ. 50 லட்சம் வழங்க குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002–ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது ஆமதாபாத் பகுதியை சேர்ந்த பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணி பெண் 10–க்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், அவரது குழந்தைகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்தது. இவ்விவகாரத்தில் குஜராத் மாநில அரசு வழங்கிய நிதியுதவி ரூ. 5 லட்சத்தை ஏற்க மறுத்து சுப்ரீம் கோர்ட்டு சென்று கூடுதல் நிவாரணம் கோரினார். 

இவ்வழக்கு விசாரணையை மேற்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு,  குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு ரூ. 50 லட்சம் வழங்க குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டது. இவ்வழக்கில் ஏற்கனவே குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அதிகாரிகள் மீது இரண்டு வாரங்களுக்குள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.