தேசிய செய்திகள்

கோவை ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை + "||" + Alerts sent to Sri Lanka after probe in Coimbatore ISIS case was completed by NIA

கோவை ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை

கோவை ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை
கோவையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் விசாரணையை மேற்கொண்ட போது கிடைத்த தகவலை கொண்டே இலங்கைக்கு இந்தியா பயங்கரவாத தாக்குதல் தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது. #SriLanka #SriLankaBlasts #NIA #India
இலங்கையில் பயங்கரவாதிகள் தொடர் வெடிகுண்டு தாக்குதலை நடத்துவதற்கு முன்னதாகவே, சதிதிட்டம் தொடர்பாக இந்தியா, 3 முறை எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஏப்ரல் 4-ம் தேதியும், குண்டு வெடிப்பதற்கு முந்தைய நாளும், குண்டு வெடிப்புக்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாகவும் இந்தியா தொடர்ச்சியாக எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆனால் இலங்கை பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தவில்லை. 

இதன் காரணமாக நடைபெற்ற தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது.

இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல சதி செய்ததாக தேசிய புலனாய்வு பிரிவு தமிழகத்தில் கடந்த டிசம்பரில் சோதனையை மேற்கொண்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள், செல்போன்கள், பென் டிரைவ்களை தேசிய புலனாய்வு பிரிவினர் கைப்பற்றினர். கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. 

 அப்போது சிக்கிய வீடியோக்களை தேசியப் புலனாய்வு பிரிவினர் ஆய்வு செய்த போது, இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ஹக்ரான் ஹாசிம், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிடுவதை காட்டியது தெளிவானது. இதனையடுத்து ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய சமூக வலைதளங்கள் சிலவற்றை ஆய்வு செய்த போது தகவல்களை தேசிய புலனாய்வு பிரிவினர் சேகரித்தனர். பின்னர் கிறிஸ்தவ தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என இலங்கையை இந்தியா எச்சரித்துள்ளது என தெரியவந்துள்ளது.

கோவை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் இருந்து பெறப்பட்ட வீடியோக்களில், ஹாசிம், இலங்கை, தமிழகம், கேரளாவில் உள்ள இளைஞர்கள் இப்பிராந்தியத்தில் இஸ்லாமிய அரசை நிறுவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. கோவை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைய ஹாசிம் உடன் தொடர்பில் இருந்துள்ளனர் எனவும் தெரியவந்தது. கோவை வழக்கில் விசாரணை முடிந்தாலும், இப்போது இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தொடர்பாக விசாரிக்க வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. 

அவர்கள், சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி, ஓட்டேரி சலாவுதீன், பல்லாவரம் சம்சுதீன், திண்டிவனம் இஸ்மாயில் மற்றும் இவர்களை அழைத்து செல்ல வந்த கோவை என்.எச்.ரோடு பகுதியை சேர்ந்த ஆசிக் ஆகியோர் ஆவர். 

ஹாசிம் இலங்கை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தற்கொலை தாக்குதலை நடத்தியுள்ளார் எனவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.