தேர்தல் செய்திகள்

பிரதமர் மோடி நடத்தை விதிமீற தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது : மாயாவதி குற்றச்சாட்டு + "||" + Election Commission letting Modi violate model code Mayawati

பிரதமர் மோடி நடத்தை விதிமீற தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது : மாயாவதி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி நடத்தை விதிமீற தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது : மாயாவதி குற்றச்சாட்டு
பிரதமர் மோடி நடத்தை விதிமீற தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது என மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
மாயாவதி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வரிசையான தகவல்களில், பிரதமர் மோடி தொடர்ந்து பலமுறை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக புகார் கூறப்பட்டாலும், அவர் சுதந்திரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. அதனாலேயே அவர் பெண்களுக்கு மரியாதை கொடுக்க தவறுவது முதல் பல்வேறு எல்லைகளையும் கடந்து வருகிறார். 

பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் நாட்டின் மீது ஒரு ஒப்பற்ற தலைவரை திணித்துள்ளது அல்லவா? பா.ஜனதா கட்சியும் அதன் கம்பெனியும் எதிர்க்கட்சியில் பிரதமர் பதவிக்கு யார்? என்று கேட்டு மக்களை தொடர்ந்து அவமதித்து வருகிறது. முன்புகூட நேருவுக்கு பின்னர் யார் என்ற திமிரான கேள்வி எழுந்தது. ஆனால் மக்கள் இதுபோன்ற அர்த்தமற்ற கேள்விக்கு சரியான பதிலடியை திருப்பி கொடுப்பார்கள். வெகு விரைவில் வேறு ஒருவரை அவர்கள் நிச்சயமாக கொடுப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.