தேசிய செய்திகள்

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை + "||" + supreme court order interim ban to arumugasamy enquiry commission

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. #ArumugaswamyCommission #SupremeCourt
புதுடெல்லி,

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ டாக்டர்கள், பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது. 

அப்பல்லோ டாக்டர்களின் சாட்சியம் தவறாக பதிவு செய்யப்படுவதாக கூறி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அப்பல்லோ நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

‘ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பல்லோ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  அந்த வழக்கு 26-ந் தேதி (இன்று) விசாரணைக்கு  வந்தது.  

அப்போது, ஆறுமுகசாமி விசாரணை ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அப்பல்லோ கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கும் படி நோட்டீஸ் அனுப்பி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.